ஷா ஆலம், ஏப்ரல் 9: டெங்கில், புக்கிட் டுகாங் பழங்குடியினர் கிராமத்தில் ஆறு சோலார் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டு, அப்பகுதி மக்களின் பாதுகாப்பு, குறிப்பாக இரவு நேரங்களில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வசதி வெளிச்சத்தை வழங்குவதோடு, சம்பந்தப்பட்ட சமூகத்தினரின் தினசரி நடமாட்டத்திற்கும் உதவுகிறது என்று பழங்குடியினர் விவகாரங்களுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராய்டு வீரமன் தெரிவித்தார்.
அதிகாலையில் பள்ளிக்குச் செல்லும் பழங்குடியின பிள்ளைகள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் பயணிக்க இந்த சோலார் விளக்குகள் பெரிதும் பயனளிக்கின்றன என்றார் அவர்.
"மிக முக்கியமாக, வளர்ச்சிப் போக்கில் பழங்குடியின சமூகம் ஒதுக்கப்படவில்லை என்பதை இந்த திட்டம் பிரதிபலிக்கிறது," என்று அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டார்.
தெருவிளக்குகள் போன்ற அடிப்படை வசதிகளை வழங்குவது, அனைத்து சமூகத்தினரின் நலனை உறுதி செய்வதில் மாநில அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளில் ஒன்றாகும் என்று பாப்பாராய்டு கூறினார்.
பழங்குடியினர் உட்பட ஒவ்வொரு சமூகமும், எந்தவித வளர்ச்சி இடைவெளியும் இன்றி உரிய வசதிகளைப் பெற உரிமை உண்டு என்று அவர் வலியுறுத்தினார்.
"சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் உரிய அடிப்படை வசதிகளைப் பெறுவதை நாங்கள் உறுதிசெய்ய விரும்புகிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.
அதே வேளையில், இந்த முயற்சி பழங்குடியின சமூகத்தை தொடர்ந்து முன்னேறவும், போட்டியிடும் திறனை வளர்த்துக் கொள்ளவும் ஒரு உந்துதலாக அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பல்வேறு துறைகளில் அவர்கள் மேலும் முன்னேறுவதற்கு தொடர்ச்சியான ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்று பாப்பாராய்டு குறிப்பிட்டார்.
போதுமான வாய்ப்புகளும் ஆதரவும் வழங்கப்பட்டால், பழங்குடியின சமூகம் நாட்டின் எதிர்கால தலைவர்களாக உருவாகும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
பழங்குடியினர் கிராமத்தில் சோலார் தெருவிளக்குகள் பொருத்தப்பட்டன - பாப்பாராய்டு
9 ஏப்ரல் 2026, 7:28 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
கோலா குபு பாருவில் 20 சோலார் விளக்குகள் நிறுவப்பட்டுள்ளன
Shalini Rajamogun
24 டிசம்பர் 2025

video
Bidang solar, AI pemacu tenaga kerja masa depan
Kathiravan Manoharan
16 ஏப்ரல் 2026

national
கோலாலம்பூரை I LITE U: 70 எல்யிடி LED விளக்குகள் நாளை முதல் அலங்கரிக்கும்
Evelyn Moses
2 ஜனவரி 2026

selangor
டெங்கிலில் புயலால் பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களுக்கு உதவி வழங்கப்பட்டது
Shalini Rajamogun
23 ஜனவரி 2026

உங்கள் கருத்து என்ன?




