கிள்ளான், ஏப்ரல் 9: இங்கு, புக்கிட் ராஜாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை செய்வதற்காகப் போலி அடையாள அட்டைகள் மற்றும் பிறரின் ஆவணங்களைப் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 46 வெளிநாட்டினர் 'ஓப்ஸ் ரோடா' நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் 20 முதல் 45 வயதுக்குட்பட்ட இந்தோனேசிய மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டினர் என்று தேசியப் பதிவுத் துறை (JPN) அமலாக்கப் பிரிவு இயக்குநர் மஷாட் அப்துல் அஜிஸ் தெரிவித்தார். சட்டவிரோதமாக வேலை செய்வதற்காக முகவர்கள் மூலம் போலி ஆவணங்களைப் பெற்றதாக நம்பப்படுகிறது.
"இந்த நடவடிக்கையின் போது மொத்தம் 136 பேர் சோதனையிடப்பட்டனர். அவர்களில், செல்லுபடியாகாத ஆவணங்களைப் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் 25 பெண்கள் மற்றும் 21 ஆண்கள் என 46 வெளிநாட்டினர் தடுத்து வைக்கப்பட்டனர்," என்று அவர் கூறினார்.
"போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வெளிநாட்டுத் தொழிலாளர்களை நாட்டிற்குள் கொண்டு வந்து வேலைக்கு அமர்த்தும் ஒரு கும்பல் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய முகவர்களைக் கண்டறியும் பணியில் ஜே.பி.என் தற்போது ஈடுபட்டுள்ளது," என்று அவர் புக்கிட் ராஜாவில் உள்ள தொழிற்சாலையில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
மலேசிய குடிநுழைவுத் துறை (JIM) மற்றும் தொழிலாளர் துறை (JTK) ஆகியவற்றுடன் இணைந்து ஒரு மாதக் கால உளவுப் பணிக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மஷாட் கூறினார். சோதனையின் போது, சில தொழிலாளர்கள் அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க முயன்றதும், பெட்டிகளில் ஒளிந்து கொண்டதும் சவாலாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டார்.
இந்த வழக்கு, 1990-ஆம் ஆண்டு தேசியப் பதிவு விதிமுறைகளின் 25(1)(e) விதியின் கீழ் விசாரிக்கப்படுகிறது.
-- பெர்னாமா
போலி அடையாள அட்டைகளைப் பயன்படுத்திய 46 வெளிநாட்டினர் கைது
9 ஏப்ரல் 2026, 2:00 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
மனிதக் கடத்தல், போலி ஆவணங்களைத் தயாரிக்கும் கும்பலை மலேசியக் குடிநுழைவுத் துறை முறியடித்துள்ளது
Shalini Rajamogun
15 ஏப்ரல் 2026

national
மானிய விலை சமையல் எண்ணெய் மோசடி: ஜோகூர் பாருவில் உணவக மேலாளர் கைது
Shalini Rajamogun
11 ஏப்ரல் 2026

national
இந்தோனேசியர்களுக்குச் சொந்தமான 15 சட்டவிரோதக் குடியிருப்புகள் இடிக்கப்பட்டன
Shalini Rajamogun
10 ஏப்ரல் 2026

national
சட்டவிரோதக் குடியேறிகளை வேலைக்கு அமர்த்திய முதலாளிகளுக்கு 59 லட்சம் ரிங்கிட் அபராதம்
Shalini Rajamogun
8 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




