சபாக் பெர்ணம், ஏப்ரல் 5: சுங்கை ஆய்ர் தவாரில் உள்ள தேவான் ஸ்ரீ நக்கோடாவில் நேற்று நடைபெற்ற 'மஜ்லிஸ் தாவுத்தான் காசே டி'டேசா' நிகழ்வில் 5,000-க்கும் மேற்பட்ட வருகையாளர்கள் திரண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வை மந்திரி புசார் டத்தோஸ்ரீஅமிருடின் ஷாரி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். அவருடன் ஒற்றுமைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோக் ரிசாம் இஸ்மாயில் மற்றும் ஊராட்சி ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சூ லிம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் உரையாற்றிய அமிருடின், வருகையாளர்கள் குறிப்பாக உள்ளூர் மக்களிடமிருந்து கிடைத்த ஒற்றுமை உணர்வையும் சிறப்பான வரவேற்பையும் கண்டு வியப்பதாகக் கூறினார்.
"ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் விருந்து மற்றும் நிகழ்ச்சிகளின் போது சபாக் பெர்னாம் மக்களை சந்திக்கும்போது இந்த கலாச்சாரத்-தையும் பாரம்பரியத்தையும் உணர முடிகிறது," என்று அவர் கூறினார்.
இதனிடையே, இந்நிகழ்ச்சி மக்களுக்கும் அரசாங்க நிறுவனங்களுக்கும் இடையே உறவை வலுப்படுத்துவதையும், ஒருவருக்-கொருவர் ஒற்றுமையை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ரிசாம் கூறினார்.
"இந்நிகழ்ச்சியில் மாவட்ட அதிகாரி அலுவலகம் மற்றும் 40-க்கும் மேற்பட்ட அரசாங்க நிறுவனங்கள் பங்கேற்று, பல்வேறு வகையான பெருநாள் உணவுகளை வழங்கி மக்களுக்குச் சேவை செய்தன."
"வடக்கு முனையில் இதுதான் கலாச்சாரம். அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையே உள்ள நெருக்கம், ஒற்றுமை எப்போதும் பேணப்பட்டு, ஒருவரையொருவர் அறிந்து கொள்வதே எங்கள் நோக்கம்," என்றார் அவர்.
முன்னதாக, இந்நிகழ்வில் சபாக் பெர்ணம் மாவட்ட பொதுப்பணித் துறை சிறந்த சாவடிக்கான போட்டியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
வருகையாளர்களுக்கு ஆட்டுக்கறி, கோழி வறுவல், சாத்தே, ரொட்டி சானாய், லாக்சா, லெமாங் மற்றும் ரெண்டாங் போன்ற பலவிதமான உணவுகள் பரிமாறப்பட்டன.
சபாக் பெர்ணம்'மஜ்லிஸ் தாவுத்தான் காசே டி'டேசா' நிகழ்வுக்கு 5,000-க்கும் மேற்பட்ட வருகையாளர்கள்
5 ஏப்ரல் 2026, 3:17 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
உணவு மேஜையில் தோற்றுவிடாதீர்கள்', நோன்புப் பெருநாள் உணவுகளில் கலோரியைக் கட்டுப்படுத்துங்கள்
Pakiya
18 மார்ச் 2026

selangor
உலகளாவிய பதட்டங்களுக்கு மத்தியில், எய்டில்ஃபிட்ரிக்கு முன்னதாக ஒற்றுமையையும் மிதவாத்த்தையும் எம். பி வலியுறுத்தினார்
Pakiya
17 மார்ச் 2026

selangor
சிலாங்கூர் தீவிர வறுமையை ஒழித்தது, RS-2 வழி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்
Pakiya
23 ஏப்ரல் 2026

selangor
உலகளாவிய நெருக்கடியை எதிர்கொள்ளவும், சிலாங்கூர் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் RS-2 திட்டம்
Shalini Rajamogun
23 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




