கோலாலம்பூர், ஏப்ரல் 2: இன்று காலை 6.48 மணியளவில் இந்தோனேசியாவின் வடக்கு மலுக்குக் கடலில் 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் பிதுங்கிலிருந்து 128 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் (MetMalaysia) தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் மலேசியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை.
“MetMalaysia இந்த நிகழ்வை தொடர்ந்து கண்காணித்து வருகிறது” என்று முகநூல் பதிவு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மனடோ பகுதியில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததாகவும், பல கட்டிடங்கள் சேதமடைந்திருப்பதைக் காட்டும் காணொளிக் காட்சிகள் வெளியாகியுள்ளதாகவும் இந்தோனேசியாவின் மெட்ரோ டிவி தொலைக்காட்சி நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது.
மக்கள் பீதியில் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடியதாக மனடோவில் வசிக்கும் ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார். அவரது சுற்றுப்புறத்தில் பெரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், அலமாரிகளில் இருந்து சில பொருட்கள் கீழே விழுந்ததாகவும், மின்சாரம் துண்டிக்கப் பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
பசிபிக் நெருப்பு வளையம் (Pacific Ring of Fire) எனப்படும் நில அதிர்வுகள் அதிகம் உள்ள பகுதியில் இந்தோனேசியா அமைந்துள்ளது. இங்கு பல புவித் தட்டுகள் சந்திப்பதால், அடிக்கடி நிலநடுக்கங்களும் எரிமலை வெடிப்புகளும் ஏற்படுகின்றன.
இன்று காலை இந்தோனேசியாவின் மலுக்கு கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம், உயிர் உடமைச் சேதம்.
2 ஏப்ரல் 2026, 4:05 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
video
Amaran ribut petir, hujan lebat di tujuh negeri hingga 1 tengah hari
Kathiravan Manoharan
17 ஏப்ரல் 2026

national
இந்தோனேசியர்களுக்குச் சொந்தமான 15 சட்டவிரோதக் குடியிருப்புகள் இடிக்கப்பட்டன
Shalini Rajamogun
10 ஏப்ரல் 2026

antarabangsa
இந்தோனேசியாவில் ஒரே நாளில் ஏழு முறை வெடித்தது செமேரு மலை
Shalini Rajamogun
6 ஏப்ரல் 2026

antarabangsa
இந்தோனேசியாவின் செமேரு எரிமலை நான்கு முறை வெடித்தது
Shalini Rajamogun
3 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




