புத்ராஜெயா, பிப் 13 - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய அதிகாரப்பூர்வ மலேசியப் பயணம், வர்த்தகம், சுற்றுலா மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டிற்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மடாணி அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அந்த அதிகாரப்பூர்வப் பயணத்தின் முடிவுகள் குறித்து தெரிவித்ததாக அவர் கூறினார். பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) கையெழுத்திடப்பட்டதாகவும், இது மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான நெருங்கிய உறவை வெளிப்படுத்துவதாகவும் ஃபஹ்மி குறிப்பிட்டார்.
"சுற்றுலா மற்றும் பொருளாதாரம் ஆகிய இரண்டிலும் ஏற்படும் வளர்ச்சி மலேசியாவிற்குச் சாதகமான விளைவுகளைத் தரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
பிரதமர் அன்வாரின் அழைப்பின் பேரில், கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கி, இரண்டு நாள் அதிகாரப்பூர்வப் பயணமாக மோடி மலேசியா வந்திருந்தார். இந்தப் பயணத்தின்போது, இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளை உள்ளடக்கிய 11 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் ஆவணங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
மலேசியா-இந்தியா இடையிலான பொருளாதார உறவுகள் தொடர்ந்து வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகின்றன. 2025-ஆம் ஆண்டில் இருதரப்பு வர்த்தகத்தின் மொத்த மதிப்பு 79.49 பில்லியன் ரிங்கிட்டை (18.59 பில்லியன் அமெரிக்க டாலர்) எட்டியது.
மோடியின் வருகை வர்த்தகம், சுற்றுலா மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கிறது
13 பிப்ரவரி 2026, 9:44 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
மேற்கு ஆசிய பதற்றம்: இந்தியப் பிரதமர் மோடியுடன் அன்வார் இப்ராஹிம் அவசர ஆலோசனை
Shalini Rajamogun
20 மார்ச் 2026

national
இந்தியப் பிரதமரின் வருகையின் பலன், காசநோய் குழுமம் மக்களவையின் கவனத்தை ஈர்க்கிறது
Mavitthran
10 பிப்ரவரி 2026

national
பிரிக்ஸில் மலேசியா-இந்தியா பங்களிப்பை வலுப்படுத்துகின்றன; சமச்சீரான அனைத்துலக ஒழுங்கிற்கு ஆதரவு
Mavitthran
9 பிப்ரவரி 2026

video
Dakwaan harga minyak hanya naik di Malaysia dangkal, mengelirukan
Kathiravan Manoharan
9 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




