கோத்தா பாரு, மார்ச் 17: கோலா திரங்கானு-கோத்தா பாரு சாலையில் உள்ள பண்டார் பெர்மைசூரி, கிமீ 70-இல் நேற்று நடந்த விபத்தில் உயிரிழந்த இரு தரைப்படை இராணுவ வீரர்களின் உடல்கள், இன்று இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப் பட்டன.
21 வயதான முஹம்மது அமினுதீன் அம்ரான், இங்குள்ள முலோங், கம்போங் பின்ஜாய் இஸ்லாமியக் கல்லறையில் அதிகாலை மணி 4.35-க்கு அடக்கம் செய்யப்பட்டார். அதேவேளையில், 36 வயதான முகமது ஷாகிரான் சைதி, பாசிர் மாஸ், புனுட் சூசு, கம்போங் கெடோண்டோங் ஹிலிர் இஸ்லாமியக் கல்லறையில் காலை மணி 10.35-க்கு அடக்கம் செய்யப்பட்டார்.
ஜொகூர், தெப்ராவ், பிரிகேட் 7 பட்டறையில் பணிபுரிந்த முகமது ஷாகிரான் மற்றும் முஹம்மது அமினுதீன் ஆகிய இருவரும், விடுமுறையில் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர்கள் பயணம் செய்த ஹோண்டா சிவிக் கார் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தனர்.
கோலா திரங்கானுவிலிருந்து கோத்தா பாருவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அவர்களது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்ப்புறம் இருந்த பாதையில் நுழைந்து ஒரு டிரெய்லர் லாரியுடன் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக நம்பப் படுவதாக செத்தியூ மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் முகமது ஜைன் மாட் டிரிஸ் கூறினார்.
இந்த மோதலுக்குப் பிறகு, பாதிக்கப்பட்டவர்களின் கார் மீண்டும் எதிர்ப்புறப் பாதைக்குச் சரிந்து, ஒரு புரோட்டான் சாகா கார் மீது உரசி, பின்னர் சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள கூரையிடப்பட்ட கார் நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பெரோடுவா அல்சா கார் மீது மோதியது.
பண்டார் பெர்மைசூரியில் விபத்தில் உயிரிழந்த இரு தரைப்படை இராணுவ வீரர்களுக்கு ராணுவ மரியாதை செய்யப் பட்டன
17 மார்ச் 2026, 6:59 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
தொலைபேசி மோசடியால் வியாபாரி ஒருவர் 8.8 லட்சம் ரிங்கிட்டை இழந்துள்ளார்
Shalini Rajamogun
7 மே 2026

national
கடந்த ஆண்டு போதைக்கு அடிமையான கிளந்தான், திரங்கானு, கெடா மற்றும் பெர்லிஸ் ஆகிய நாட்டின் எல்லைப்புற மாநிலங்களின் நிலை கவலையளிக்கிறது.
Pakiya
25 ஏப்ரல் 2026

national
திரங்கானு உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் சோதனையில் (KPDN) பல்வேறு விதிமீறல்கள் சம்பந்தப்பட்ட 39 வழக்குகளை பதிவு செய்துள்ளது
Pakiya
17 மார்ச் 2026
national
மூழ்கியதாக அஞ்சப்படும் வெளிநாட்டு மாணவரைத் தேடும் பணி தொடர்கிறது - தீயணைப்புத் துறை
PAKIYA
17 பிப்ரவரி 2026

உங்கள் கருத்து என்ன?




