சியோல்: தென் கொரியாவின் வடக்கு கியோங்சாங் மாநிலத்தில் உள்ள யோங்ஜு நகருக்கு அருகே எஃப்-16சி (F-16C) ரக போர் விமானம் ஒன்று புதன்கிழமை நொறுங்கி விபத்துக்குள்ளானது. இருப்பினும், அதன் விமானி பத்திரமாக வெளியேறி உயிர் தப்பியதாக தென் கொரிய விமானப்படை தெரிவித்துள்ளது.
சுங்ஜு விமானப்படை தளத்தைச் சேர்ந்த அந்த விமானம், இரவு நேரப் பறக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது உள்ளூர் நேரப்படி இரவு சுமார் 7.31 மணியளவில் யோங்ஜுவிற்கு அருகிலுள்ள ஒரு மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.
"விமானி பத்திரமாக வெளியேறிவிட்டார். அவருக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்விபத்து காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை," என்று விமானப்படை செய்தியாளர்களுக்கு அனுப்பிய குறுஞ்செய்தி அறிக்கையில் கூறியது.
இந்த விபத்துக்கான சரியான காரணத்தை கண்டறிய ஒரு சிறப்புப் பணிக்குழு அமைக்கப் பட்டுள்ளதாக விமானப்படை தெரிவித்தது.
தென் கொரியாவின் வடக்கு கியோங்சாங் மாநிலத்தில் உள்ள யோங்ஜு நகருக்கு அருகே எஃப்-16சி (F-16C) ரக போர் விமானம் விழுந்து நொறுங்கியது.
26 பிப்ரவரி 2026, 1:50 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
உங்கள் கருத்து என்ன?




