பெட்டாலிங் ஜெயா, செப் 9: “ஒரே மேடை, ஒரே சாம்பியன்” என்ற குறிக்கோளுடன் மலேசியாவின் சிறந்த டிஜே கலைஞர்களை ஒன்றிணைக்கும் பீட் தலைவன் தேசிய அளவிலான டிஜே போட்டி அக்டோபர் 15, 2025 அன்று புக்கிட் ஜாலில் அரங்கத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெற உள்ளதாக செந்தோசா சட்டமன்றத் தலைவர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்தார்.

இந்த போட்டி Real Jockeys, Trinity Solutions, செந்தோசா தொகுதி மக்கள் சேவை மையம், சிலாங்கூர் செந்தோசா நல சங்கம் மற்றும் Agenda Suria Communication ஆகியோரின் ஒத்துழைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பீட் தலைவன் என்பது வெறும் போட்டி மட்டுமல்ல, மாறாக இளைஞர்களை ஊக்குவிப்பது, நம்பிக்கையை வளர்த்து, அவர்களின் இசை மற்றும் படைப்பாற்றலை தேசிய அளவில் வெளிப்படுத்தும் ஒரு சமூக இயக்கமாகும். மேலும் மலேசியாவின் முன்னணி டிஜேக்கள் தேசிய சாம்பியன் பட்டத்தை வெல்லும் நோக்கில் மேடையில் நேருக்கு நேர் மோதவுள்ளனர்.
இந்த போட்டிக்கான பதிவு நாளை தொடங்கி செப்டம்பர் 23 வரை இணையத்தில் பதிந்து கொள்ளலாம். இப்போட்டியின் தேர்வு சுற்று செப்டம்பர் 26 நடைபெறும் நிலையில், அரையிறுதி அக்டோபர் 5 அன்று நடைபெறும்.
மாபெரும் இறுதிச்சுற்று அக்டோபர் 15 புக்கிட் ஜாலிலில் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டு தங்களின் திறமையை வெளிப்படுத்தி RM12,000 மதிப்புள்ள ரொக்கம், சான்றிதழ்கள் மற்றும் பல்வேறு பரிசுத் தொகையை வெள்ள அவர் அழைத்தார்.
இந்த நிகழ்ச்சி, மலேசிய இளைஞர்களுக்கு தங்கள் திறமையை வெளிப்படுத்தும் பொன்னான வாய்ப்பாக அமைகிறது. பீட் தலைவன் மூலம் சிலாங்கூர் மாநிலம், எதிர்கால படைப்பாற்றல் மையமாகவும், இளைஞர்களின் இசை திறமையை உலகுக்கு அறிமுகப்படுத்தும் தளமாகவும் முன்னெடுக்கப்படும் என்றார் அவர்.
இப்போட்டியின் மேல் விவரங்களுக்கு, Money Boy – 0125803605, Hardee Bee – 0173149462 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும்.