ad

RM967 மில்லியன் மதிப்புள்ள 11.8 மில்லியன் எல்லை தாண்டிய QR கட்டணப் பரிவர்த்தனைகள்

9 செப்டெம்பர் 2025, 4:36 AM
RM967 மில்லியன் மதிப்புள்ள 11.8 மில்லியன் எல்லை தாண்டிய QR கட்டணப் பரிவர்த்தனைகள்

கோலாலம்பூர், செப் 9 - 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் (1H) வெளிநாடுகளுக்குச் செல்லும் மலேசியர்களும் மற்றும் மலேசியாவிற்கு வருகை புரிந்த வெளிநாட்டுப் சுற்றுபயணிகளும் RM967 மில்லியன் மதிப்புள்ள 11.8 மில்லியன் எல்லை தாண்டிய QR கட்டணப் பரிவர்த்தனைகளைச் செய்தனர்.

2024ஆம் ஆண்டில் RM860 மில்லியன் மதிப்புள்ள 11.7 மில்லியன் பரிவர்த்தனைகளுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் குறிக்கிறது என்று பிரதமர் துறை (கூட்டாட்சிப் பிரதேசங்கள்) அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சாலிஹா முஸ்தபா கூறினார்.

"இந்த பரிவர்த்தனைகளில் மலேசியா மற்றும் நான்கு ஆசியான் உறுப்பு நாடுகளுக்கும் (கம்போடியா, இந்தோனேசியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து) இடையிலான பரிவர்த்தனைகளும் அடங்கும்.

மேலும் வணிக ஏற்பாடுகள் மூலம் நிறுவப்பட்ட மலேசியா-சீனா மற்றும் மலேசியா-கொரியா இணைப்புகளும் அடங்கும்," என்று அவர் நாடாளுமன்றத்தின் வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்தார்.

ஆசியான் நாடுகளுக்குள் டிஜிட்டல் தயார்நிலையின் மாறுபட்ட நிலைகளைக் கருத்தில் கொண்டு, ஆசியான் நாடுகளுக்கு இடையேயான வேறுபாடுகளை, குறிப்பாக எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளில், ஒத்திசைக்க மலேசியா எடுக்கும் முயற்சிகள் குறித்து செனட்டர் டத்தோ முகமட் ஹட்டா முகமட் ராம்லி கேட்ட கேள்விக்கு டாக்டர் சாலிஹா இவ்வாறு பதிலளித்தார்.

அதுமட்டுமில்லாமல், நெக்ஸஸ் திட்டத்தின் கீழ், பலதரப்பு எல்லை தாண்டிய கட்டண வலையமைப்பை உருவாக்க, பேங்க் நெகாரா மலேசியா (BNM) தற்போது மூன்று ஆசியான் நாடுகள் மற்றும் இந்தியாவின் மத்திய வங்கிகளுடன் ஒத்துழைத்து வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த அடுத்த தலைமுறை கட்டண தீர்வு முயற்சி, நெக்ஸஸ் கட்டணத் திட்ட தளத்துடன் ஒரே இணைப்பு மூலம் உலகளாவிய உள்நாட்டு உடனடி கட்டண முறைகளை இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.