ஓஸ்னாப்ரூக் (ஜெர்மனி), செப் 9: வடக்கு ஜெர்மனியில் பழுதடைந்த லிஃப்டில் நான்கு நாட்கள் சிக்கி கொண்ட 70 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சமீபத்தில் மீட்கப்பட்டதை காவல்துறை தெரிவித்ததாக ஜெர்மன் செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜூன் மாத இறுதியில் ஓஸ்னாப்ரூக்கில் உள்ள பாதிக்கப்பட்டவரின் தனியார் வீட்டில் இந்த சம்பவம் நடந்ததுள்ளது. ஃபியூஸ் லிஃப்ட் செயலிழந்து, அவசர அழைப்பு பொத்தானை பாதித்ததாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
நான்கு நாட்களுக்குப் பிறகு பாதிக்கப்பட்டவரின் மகன் அந்த நபரைக் கண்டுபிடித்தார். உடனடியாக அவர் அவசர சேவைக்கு அழைப்பு விடுத்தார். பின்னர், பாதிக்கப்பட்டவரை மீட்புப் பணியாளர்கள் மீட்டனர். அவர் இப்போது குணமடைந்து "நல்ல" நிலையில் உள்ளார்.
தண்ணீர் இல்லாமல் ஒரு நபர் மூன்று நாட்கள் மட்டுமே உயிர்வாழ முடியும் என்பதால், அந்த நபர் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பெர்னாமா-டிபிஏ