ஷா ஆலம், ஆக. 3 - மாநில அரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிலாங்கூர் சாரிங் இலவச சுகாதாரப் பரிசோதனை இயக்கம் செப்டம்பர் மாதம் முழுவதும் நான்கு இடங்களில் நடைபெறுகிறது.
இருதயம், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், சிறுநீரகம், புற்றுநோய், கண்கள், காதுகள் மற்றும் பற்கள் உள்ளிட்ட சுகாதார பரிசோதனைகளை வழங்கும் இந்த சிலாங்கூர் சாரிங் நிகழ்வு காலை 9.0 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறுகிறது.
செப்டம்பர் மாதம் முழுவதும் இந்நிகழ்வு நடைபெறும் இடங்கள் பின்வருமாறு:
• செப்டம்பர் 6 (சனிக்கிழமை) செமாராக் பாடி ஹோம்ஸ்தே மண்டபம் (சபாக் தொகுதி)
• செப்டம்பர் 7 (ஞாயிற்றுக்கிழமை) எம்.பி.எஸ்.ஜே. லாமான் புத்ரி 3 பல்நோக்கு மண்டபம் (கின்ராரா தொகுதி)
• செப்டம்பர் 14 (ஞாயிற்றுக்கிழமை) காம்ப்ளெக்ஸ் 3கே, எம்.பி.எஸ்.ஜே. (ஸ்ரீ கெம்பாங்கான் தொகுதி)
• செப்டம்பர் 27 (சனிக்கிழமை) ஷா ஆலம், செக்சன் 28 கெனாங்கா மண்டபம் (கோத்தா கெமுனிங் தொகுதி)
பின்வரும் நான்கு வழிமுறைகளைப் பயன்படுத்தி சிலாங்கூர் சாரிங் திட்டத்தில் பதிவு செய்யலாம்.
1. செலங்கா செயலியைப் பதிவிறக்கம் செய்யவும்
2. சிலாங்கூர் சாரிங் பட்டனை அழுத்தவும்
3. கேள்வித்தாள் படிவத்தை பூர்த்தி செய்யவும்
4. மருத்துவப் பரிசோதனை நடைபெறும் இடம் மற்றும் தேதியைத் தேர்ந்தெடுக்கவும்
கடந்த 2022ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டத்தை தொடர மாநில அரசு 2025 வரவு செலவுத் திட்டத்தில் 20 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.
குடும்ப மருத்துவ வரலாறு, உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பவர்கள் முன்கூட்டியே நோயைக் கண்டறிய உதவுவதற்காக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
செப்டம்பர் மாதம் நான்கு இடங்களில் இலவச மருத்துவப் பரிசோதனை
3 செப்டெம்பர் 2025, 10:57 AM