மாட்ரிட், செப். 2 - காஸா மக்களுக்காக உதவிப் பொருட்கள் ஏற்றப்பட்ட டஜன் கணக்கான படகுகள், நேற்று மாலை பார்சிலோனா துறைமுகத்திலிருந்து புறப்பட்டதை ராய்ட்டர்ஸ் காணொளிக் காட்சிகள் காட்டுகின்றன.
முன்னதாக, புயல் வானிலை காரணமாக துறைமுகத்திற்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட நிலையில் நேற்று அவர்கள் தங்கள் பயணத்தை மீண்டும் தொடர்ந்தனர்.
'குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா மிஷன்' பணித்திட்டத்தின் கீழ் அப்படகுகள் துறைமுகத்தை விட்டு வெளியேறும்போது சங்கொலி எழுப்பிய வேளையில் "சுதந்திரம், சுதந்திர பாலஸ்தீனம்" என்று துறைமுகத்தில் இருந்த ஆர்வலர்கள் முழக்கமிட்டனர்.
இஸ்ரேலின் கடற்படை முற்றுகையை உடைத்து உள்ளே நுழைந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகாப் போரினால் பேரழிவிற்கு உள்ளான பகுதியில்
உணவு மற்றும் மனிதாபிமான பொருட்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த டஜன் கணக்கான படகுகள் பயணத் தொகுப்பில் பருவநிலை பிரச்சாரகர் கிரெட்டா துன்பெர்க் மற்றும் கேம் ஆஃப் ட்ரோன்ஸ் நடிகர் லியாம் கன்னிங்ஹாம் உள்ளிட்ட பாலஸ்தீன ஆதரவு ஆர்வலர்கள் உள்ளனர்.
மலேசியாவிலிருந்து 15 பிரதிநிதிகளும் இந்த பயணத்தில் இடம் பெற்றுள்ளனர்.
மலேசியாவின் பங்கேற்பு மனிதாபிமான நோக்கத்திற்கான நாட்டின் உண்மையான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது என்று மாபிம் மலேசியாவின் தலைமை நிர்வாக அதிகாரியும், ஜி.எஸ்.எஃப்.க்கான மலேசிய பணிக்குழுத் தலைவருமான டத்தோ சானி அராபி கூறினார்.
ஜாலூர் ஜெமிலாங் கொடி பார்சிலோனாவில் பெருமையுடன் பறந்தபோது மலேசியக் குழுவை அனைத்துலகச் சமூகம் அன்புடன் வரவேற்றது.
உலகம் வெறும் பேச்சோடு மட்டுமல்லாது நடவடிக்கையும் எடுக்கிறது என்பதற்கு இந்த கடல் பணி ஒரு சான்றாகும். மலேசியா அதன் துணிச்சலுக்காக மதிக்கப்படுகிறது, பிரதமர் சுமுத் நுசாந்தாரா இயக்கத்தின் புரவலராகப் பணியாற்றி சர்வதேச அளவில் உறுதியான நடவடிக்கை எடுக்கிறார் என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.
உதவிப் பொருள்களுடன் காஸா நோக்கிச் செல்லும் படகுகளில் 15 மலேசியர்கள் இணைந்தனர்
2 செப்டெம்பர் 2025, 9:30 AM