புத்ராஜெயா, செப். 2 - ஸ்பான் எனப்படும் தேசிய நீர் சேவை ஆணையம் மூன்று அனைத்துலக தர நிலைகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மேலாண்மை அமைப்பு (ஐ.எம்.எஸ்.) சான்றிதழைப் பெற்றுள்ளது.
இந்த சான்றிதழ் ISO 9001:2015 தர மேலாண்மை அமைப்பு (கியுஎம்எஸ்), ISO 37001:2016 ஊழல் எதிர்ப்பு மேலாண்மை அமைப்பு (ஏபிஎம்எஸ்) மற்றும் ISO 27001:2022 தகவல் பாதுகாப்பு மேலாண்மை அமைப்பு (ஐஎஸ்எம்எஸ்) ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.
இந்த சான்றிதழ் இவ்வாண்டு மே மாதம் 17 முதல் 2028ஆம் ஆண்டு மே 18 வரை மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்று ஸ்பான் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியது.
இந்தச் சான்றிதழ் ஆணையத்திற்கு நன்மை அளிப்பதோடு மட்டுமல்லாமல், ஒழுங்குபடுத்தப்பட்ட தரப்பினர் மற்றும் நீர் சேவை பயனீட்டாளர்களின் நம்பிக்கையையும் ஸ்பான் ஆணையத்தின் நிறுவன நிர்வாகத்தின் மிக உயர்ந்த தரநிலைகளுக்கான உறுதிப்பாட்டையும் வலுப்படுத்துகிறது என்று அந்த அறிக்கை தெரிவித்தது.
நிர்வாகத்தை வலுப்படுத்துதல் சேவை தரத்தை மேம்படுத்துதல் மற்றும் தகவல் பாதுகாப்பின் தொழில்முறை மற்றும் நெறிமுறை மேலாண்மையை உறுதி செய்தல் ஆகியவற்றுக்கான தொடர்ச்சியான முயற்சிகளுக்கு ஐ.எம்.எஸ். அமலாக்கம் ஒரு முக்கியமான அடித்தளமாக விளங்குவதாக ஸ்பான் குறிப்பிட்டது.
ஒருங்கிணைந்த மேலாண்மை அமைப்பு சான்றிதழை ஸ்பான் பெற்றது
2 செப்டெம்பர் 2025, 8:05 AM