கோத்தா பாரு, ஆக. 28 - வர்த்தக வளாகங்கள் வேப் பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோத்தா பாரு இஸ்லாமிய மாநகர் மன்றம் எச்சரித்துள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு முதல் இதுபோன்ற தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கு எந்த வணிக உரிமங்களும் வழங்கப்படவில்லை என்பதோடு கிளந்தான் மாநில அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப அமலாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதன் தலைவர் அஸி ரஹிமி முகமது கூறினார்.
தனிப்பட்ட பயன்பாடு தொடர்பான விவகாரம் சுகாதாரத் துறையின் அதிகார வரம்பிற்குள் வருவதால் அதில் தலையிடும் அதிகாரம் மாநகர் மன்றத்திற்கு இல்லை. நிர்ணயிக்கப்பட்ட பகுதிகளில் புகைபிடிப்பதை அமல்படுத்துவது போன்றது என்று அவர் நேற்று இரவு டத்தாரான் பண்டாராயாவில் மாநகர் மன்றத்தின் தேசிய மாத பாராட்டு விழாவில் பங்கேற்றப் பின்னர் பெர்னாமாவிடம் அவர் கூறினார்.
மாநகர் மன்றம் அதன் லைசென்ஸ் மற்றும் அமலாக்கப் பிரிவுகள் வழியாக உரிமம் பெறாத வேப் விற்பனையைத் தடுக்க வழக்கமான நடவடிக்கைகளைத் தொடரும்.
வேப் பொருட்களை மீண்டும் மீண்டும் விற்பனை செய்யும் வளாகங்கள் பிடிபட்டால் உரிமத்தை ரத்து செய்தல் மற்றும் மூடல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்.
உள்ளூர் அதிகாரிகளின் அதிகார வரம்பிற்கு வெளியே செயல்படும் ஆன்லைன் தளங்கள் மூலம் சட்டவிரோத விற்பனை இன்னும் நடப்பதை நாங்கள் அறிவோம்
என்று அஸி கூறினார்.
கோத்தா பாருவில் வேப் விற்பனைக்கு எதிராக நடவடிக்கை
28 ஆகஸ்ட் 2025, 6:59 AM