புதுடில்லி, ஆக. 27 - கனமழை காரணமாக
இந்தியாவின் வட பகுதி மாநிலமான ஜம்முவில் உள்ள புகழ்பெற்ற இந்து யாத்திரைப் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதில் குறைந்தது 30 பேர் உயிரிழந்ததாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் கூறியது.
அதே நேரத்தில் வெள்ள அபாயம் காரணமாக மக்கள் இரவில் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அதிகாரப்பூர்வ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர் கூட்டரசுப் பகுதி மற்றும் மலைப்பாங்கான லடாக் தொடங்கி இமயமலைப் பகுதிக்கு வரை அதிக மழை பெய்யும் என்று வானிலை அலுவலகம் கணித்துள்ளது.
கிட்டத்தட்ட தகவல் தொடர்பு இல்லாத பகுதியில் தொலைத்தொடர்பு சேவைகளை சீரமைக்க அதிகாரிகள் முயற்சித்து வருவதாக ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார்.
இங்குள்ள வைஷ்ணவ தேவி கோயிலுக்கு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் யாத்ரீகர்கள் செல்லும் பாதையில் சிக்கி குறைந்தது 30 பேர் உயிரிழந்ததாக ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்தது.
நேற்று 368 மில்லி மீட்டர் மழை பெய்ததால் ஜம்முவில் உள்ள கல்வி நிறுவனங்களை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர். அங்கு நேற்று கடுமையான மழை பெய்ததாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.