கோத்தா பாரு, ஆக. 27 - தானா மேரா, கம்போங் சாட் ஆற்றில் கடந்த திங்கட்கிழமை விழுந்த தனது மகனை வெற்றிகரமாக மீட்ட பிறகு நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று நம்பபடும் ஆடவர் ஒருவர் இன்று காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
நாற்பந்தாறு வயதான சைஃபுல்டின் ரம்லி @ கசாலியின் உடல் இன்று காலை சுமார் 7.00 மணியளவில் மீட்புக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டதாக தானா மேரா மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்ரிண்டெண்டன் முகமட் ஹக்கி ஹஸ்புல்லா கூறினார்.
ஆற்றில் விழுந்த இடத்திலிருந்து சுமார் 700 மீட்டர் தொலைவில் பாதிக்கப்பட்டவரின் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக தானா மேரா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று இன்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
இம்மாதம் 25 ஆம் தேதி தனது நான்கு பிள்ளைகளுடன் சைஃபுல்டின் நடைப்பயணம் சென்றதாகக் கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் தானா மேரா, ஜாலான் கம்போங் சாட்டில் உள்ள தங்களின் வீட்டிற்கு அருகிலுள்ள ஆற்றில் தவறி விழுந்துள்ளார்.
தனது 11 வயது மகனை அவர் வெற்றிகரமாக காப்பாற்றியுள்ளார். எனினும் ஆற்றின் வலுவான நீரோட்டத்தில் அவர் அடித்துச் செல்லப்பட்டார்.
ஆற்றில் விழுந்த மகனைக் காப்பாற்றும் போது நேர்ந்த துயரம் - தந்தை நீரில் மூழ்கி மரணம்
27 ஆகஸ்ட் 2025, 8:02 AM