ரவாங், ஆக 27 - ரவாங் அங்குன் சிட்டி மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மிகப்பெரிய அளவில் நடைபெற்ற சிலம்பம் போட்டியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
அடிமுறை சிலம்பக்கழக ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போட்டியை கோலகுபு பாரு சட்டமன்ற உறுப்பினர் பாங் சோக் தாவ் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
அடிமுறை சிலம்பக்கழக தலைவர் முனியாண்டி தலைமையில் சிறப்பான ஏற்பாடு செய்த இப்போட்டி நிகழ்வுக்கு கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன், புக்கிட் காசிங் சட்டமன்ற ஆர். ராஜீவ் ஆகியோர் சிறப்பு வருகை தந்தனர்.
பிரகாஷ் தமது உரையில் வரும் 2026 சிலாங்கூர் சுக்மா போட்டியில் சிலம்பம் மீண்டும் இடம் பெற்றுள்ளது பாராட்டுக்குரியது என்று தெரிவித்தார். பாரம்பரிய தற்காப்பு கலையாக விளங்கும் சிலம்பத்தை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
ஒற்றுமை துறை துணை அமைச்சர் சரஸ்வதி சிறப்பு வருகை தந்து போட்டியை அதிகாரப்பூர்வமாக நிறைவு வைத்ததோடு சிலம்பப் போட்டிக்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவேன் என்றார்.
அடுத்தாண்டு சிலாங்கூரில் நடைபெறும் சுக்மா போட்டியில் சிலம்பம் இடம் பெறுவதை உறுதி செய்வதில் தாங்கள் செய்த முயற்சிகளை அவர் விவரித்தார்
விலாயா மாநில சிலம்பக் கழக தலைவர் டாக்டர் ஆர். டி. உதயகுமார் மற்றும் முன்னாள் இந்நிகழ்வில் சிலம்பம் கழகத் தலைவர் விஸ்வ லிங்கம், பகாங் மாநில சிலம்பம் கழகத் தலைவர் தருமசீலன், கிளாந்தான் மாநில சிலம்பம் கழகத் தலைவர் சிவபாலன் மற்றும் விலாயா மாநில சிலம்பம் தொழில்நுட்ப தலைவர் கிறிஸ்டோபர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
ரவாங்கில் சிலம்பப் போட்டி- 300க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்பு
27 ஆகஸ்ட் 2025, 5:38 AM