ஷா ஆலம், ஆகஸ்ட் 26: நேற்று இரவு ஏற்பட்ட புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை எம்பிஐ வழங்குகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் உதவிக்கு விண்ணப்பிக்க காவல்துறையில் புகார் அளிக்கவும், சேதத்தின் புகைப்படங்களை ஆதார ஆவணங்களாக எடுக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டதாக எம்பிஐ அறக்கட்டளையின் தலைவர் அஹ்மட் அஸ்ரி ஜைனல் நோர் கூறினார்.
நன்கொடைகளை விநியோகிக்கும் செயல்முறையை விரைவாகவும் முறையாகவும் செய்ய முடியும் என்பதை உறுதி செய்வதற்கு இந்த நடவடிக்கை முக்கியமானது என்று அவர் விளக்கினார்.
“பாதிக்கப்பட்ட வீடுகளை அடையாளம் காண எங்கள் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
"அதே நேரத்தில், பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து சேதத்தின் படங்களை எடுக்க வேண்டும். இதனால் உதவிக்கான விண்ணப்பத்திற்கான அதிகாரப்பூர்வ ஆவணமாக இதைப் பயன்படுத்தலாம்," என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
ஜெராம் மற்றும் கோலா சிலாங்கூர் உள்ளிட்ட பல பகுதிகளையும், கோம்பாக் மற்றும் அம்பாங்கின் சில பகுதிகளையும் பாதித்த நேற்றிரவு ஏற்பட்ட பலத்த புயல் குறித்த முழுமையான தகவல்களை தனது குழுவினர் தற்போது சேகரித்து வருவதாக அவர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்கள் சந்தித்த சேதத்தின் அளவைப் பொறுத்து RM500 முதல் RM1,000 வரையிலான உதவி விநியோகிக்கப்படும்.
"இந்தத் இழப்பிடு முழு செலவையும் ஈடுகட்ட முடியாது என்றாலும், அது அவர்களின் சுமையைக் குறைக்கும் என்று நம்பப்படுகிறது," என அவர் விளக்கினார்.
மேலும், வெள்ளம் மற்றும் தீ உள்ளிட்ட பேரழிவுகளை எதிர்கொள்ளும் சிலாங்கூர் மக்களுக்கு உதவி வழங்க எம்பிஐ எப்போதும் தயாராக உள்ளது என்றும் அஹ்மட் அஸ்ரி வலியுறுத்தினார்.