புத்ராஜெயா, ஆக. 26 - புத்ராஜெயாவில் ஒத்திகை மற்றும் ஃபிளைபாஸ்ட் எனப்படும் இராணுவ விமானங்கள் தாழ்வாகப் பறக்கும் மெர்டேக்கா பயணத்தை எளிதாக்குவதற்காக கோலாலம்பூர் முனையக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நாளை முதல் வெள்ளி வரை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வான்வெளி மூடப்படுவதாக மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (சி.ஏ.ஏ.எம்.) அறிவித்துள்ளது.
இந்த வணக்க முறை விமானப் பயணத்தில் மலேசிய அமலாக்க நிறுவனங்களின் ஹெலிகாப்டர்கள் உள்பட 33 விமானங்கள் இடம்பெறும்.
இந்த கட்டுப்பாடு பொதுமக்கள் மற்றும் விமானங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அவசியமானது என சி.ஏ.ஏ.எம். ஓர் அறிக்கையில் கூறியது.
இந்த காலகட்டத்தில் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் வர்த்தக விமான பயணங்களில் மாற்றங்கள் இருக்கும்.
ஒத்திகை மற்றும் தேசிய தினக் கொண்டாட்டத்தின் போது சம்பந்தப்பட்ட பகுதிகளில் அனைத்து ட்ரோன் அல்லது ஆளில்லா விமான அமைப்பு நடவடிக்கைகள் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளன என பொதுமக்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம் என சி.ஏ.ஏ.எம். கூறியது.
அங்கீகரிக்கப்படாத ட்ரோன் நடவடிக்கைகள் கடுமையான பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்துகின்றன. இத்தகைய குற்றவாளிகளைப் புரிவோர் 2016ஆம் ஆண்டு சிவில் விமானப் போக்குவரத்து விதிமுறைகளின் கீழ் அமலாக்க நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று அது கூறியது.
தேசிய தின விமானப் பயணத்திற்கான ஒத்திகைகள் இன்று முதல் வியாழக்கிழமை வரை தினமும் காலை 11.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையிலும் வெள்ளிக்கிழமை காலை 8.45 மணி முதல் 9.45 மணி வரை ஒத்திகைகள் நடைபெறும்.
ஞாயிற்றுக்கிழமை மெர்டேக்கா விமானப் விமானப் பயணம் காலை 8.45 மணி முதல் 9.45 மணி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.