கோலாலம்பூர், ஆக. 25 - நாட்டின் ஒட்டுமொத்த கடன்
நிலை குறித்து அரசியல் சர்ச்சைகள் நடந்து வந்தாலும் நாட்டின் புதிய கடன் படிப்படியாகக் குறைந்து வருவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
நிதிப் பற்றாக்குறை இருக்கும் வரை மொத்தக் கடன் தொடர்ந்து அதிகரிக்கும் என்பதால் இந்த புதிய கடன் குறைப்பு முக்கியமானது என்று நிதியமைச்சருமான அவர் தெரிவித்தார்.
நிதிப் பற்றாக்குறை உண்மையில் சவாலானது. நாட்டின் கடன் விவகாரம் முடிவில்லா அரசியல் விவாதமாக இருந்தாலும் மடாணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் நிதிப் பற்றாக்குறையையும் புதிய கடனையும் குறைக்க முயற்சிக்கிறது. நாம் ஏன் அதை (நிதிப் பற்றாக்குறையை) குறைக்க வேண்டும்? நாம் அதைக் குறைக்கவில்லை என்றால் கடன் பெருகும்.
அதனால்தான் பற்றாக்குறையைக் குறைக்க வேண்டும். நாங்கள் அதனை 5.6 விழுக்காட்டிலிருந்து ஐந்து விழுக்காடு நான்கு விழுக்காடாக குறைத்துள்ளோம். இப்போது 3.8 விழுக்காடாக இருக்கும் பற்றாக்குறை அடுத்த ஆண்டு தொடர்ந்து குறையும் என்றும் கணித்துள்ளோம் என்றார் அவர்.
இன்று மேலவையில் பதின்மூன்றாவது மலேசியா திட்டத்தை தாக்கல் போது அவர் இவ்வாறு கூறினார்.
முந்தைய காலந்தொட்டு தொடர்ந்து வரும் பழைய கடன்களின் வட்டியால் ஒட்டுமொத்த கடன் அதிகரித்ததே தவிர, புதிய கடன்களால் அல்ல. புதிய கடன்கள் குறைந்து வருவதை பதிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன என அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் புதிய கடன் குறைகிறது - நிதிப் பற்றாக்குறையும் இறக்கம் காண்கிறது- பிரதமர்
25 ஆகஸ்ட் 2025, 8:36 AM