ஷா ஆலம், ஆகஸ்ட் 25 : வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான மூலதனம் தேவைப்படும் தொழில்முனைவோர் யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் வழங்கும் நிதி உதவிக்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
ஐ-பிசினஸ் மற்றும் நியாகா டாருல் எஹ்சான் (நாடி) திட்டங்கள் மூலம் தொழில்முனைவோருக்கு சிறு தொழில்களை தொடங்குவதற்கும், செயல்பாட்டு மூலதனத்தை அதிகரிப்பதற்கும் RM 50,000 வரை நிதியுதவியை ஹிஜ்ரா அளிக்கிறது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூடுதல் தகவலுக்கு hijrahselangor.com ஐப் பார்வையிடவும் அல்லது இணையம் மூலம் விண்ணப்பிப்பதற்கு QR குறியீட்டை (கீழே உள்ள போஸ்டர்) ஸ்கேன் செய்யவும் என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிதியுதவி ஆனது 60,249 ஹிஜ்ரா சிலாங்கூர் தொழில்முனைவோருக்கு பயனளித்துள்ளது. இது அவர்கள் வணிக மூலதனத்தை திரட்டவும், வணிக உபகரணங்களை வாங்கவும் உதவுகிறது என டத்தோ மரியா ஹம்சா தெரிவித்தார்.