பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 25 - சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள பல்வேறு பகுதிகளில் இன்று திடீர் மின் தடை ஏற்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் குழுக்கள் உடனடியாக மின் தடை ஏற்பட்ட இடங்களுக்கு அனுப்பப்பட்டு, சிக்கலை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளன என தெனாகா நேஷனல் பெர்ஹாட் தெரிவித்தது.
பாதிக்கப்பட்ட பகுதிகளின் பெயர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடாத நிலையில், முத்தியாரா டாமன்சாரா, அரா டாமன்சாரா, கோத்தா டாமன்சாரா மற்றும் பண்டார் உத்தாமா ஆகிய இடங்கள் மின் தடையால் பாதிக்கப்பட்டுள்ளன என்று நெட்டிசன்கள் வலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர்.
மின்சார விநியோகம் இரண்டு முதல் நான்கு மணி நேரத்திற்குள் மீளச் செய்யப்படும் என தெனாகா நேஷனல் பெர்ஹாட் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் பயனர்களின் பொறுமைக்கு நன்றி தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் ஏற்பட்ட சிரமத்திற்கும் தெனாகா நேஷனல் பெர்ஹாட் வருத்தம் தெரிவித்தது.