புத்ராஜெயா, ஆகஸ்ட் 25 - 2025 தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 25 முதல் 31ஆம் தேதி வரை டாத்தாரான் புத்ராஜெயா பகுதியில் அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் ட்ரோன்கள் பறக்கவிடக் கூடாது என்று பொதுமக்களுக்கு நினைவுறுத்தப்பட்டுள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்து விதிகளின் தடையை மீறுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று புத்ராஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ஐடி ஷாம் முகமது தெரிவித்துள்ளார்.
மேலும், மலேசிய ஆயுதப் படைகள் தேசிய தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பீரங்கி வெடிப்பு நிகழ்ச்சியை நடத்த உள்ளதாகவும் அதனைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
தேசிய தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்க விரும்பும் பொதுமக்கள், தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
`Malysia Madani; Rakyat disantuni' என்ற கருப்பொருளில், இவ்வாண்டு தேசிய தினக் கொண்டாட்டம் ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று டத்தாரன் புத்ராஜெயாவில் நடைபெறவிருக்கிறது. மலேசியா தினக் கொண்டாட்டம் செப்டம்பர் 16 ஆம் தேதி அன்று பினாங்கில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.