காஜாங், ஆகஸ்ட் 25 - மலேசியர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற உணவான சாத்தே காஜாங் சிலாங்கூர் மாநிலத்தின் பாரம்பரிய உணவாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மேன்மைத் தங்கிய சிலாங்கூர் அரசியார் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். காஜாங்கில் '1,001 சாத்தே ருசி வகைகள்' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவர் அந்த பிரகடனத்தைச் செய்தார்.
இது சாத்தே உணவின் பாரம்பரியத்தை தொடர்ந்து பாதுகாத்து, மாநிலத்தின் சமையல் அடையாளமாக பெருமைப்படச் செய்வதற்கான முயற்சியாகும்.
1870-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டிலிருந்து நாட்டில் வேறு எங்கும் சாத்தே உணவுக்கு இல்லாத ஒரு தனித்துவத்தை இந்த சாத்தே காஜாங் பெற்று வருகிறது.