வாஷிங்டன், ஆக. 21 - தனது பணியின் போது மிகவும் கருணையுள்ளத்துடன் நடந்து கொண்டதன் காரணமாக 'உலகின் சிறந்த நீதிபதி' என்று வர்ணிக்கப்பட்ட அமெரிக்க நீதிபதி பிராங்க் கேப்ரியோ கணைய புற்றுநோயால் காலமானதாக அனடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
ரோட் தீவு நகராட்சி நீதிமன்ற நீதிபதியான கேப்ரியோ, கணைய புற்றுநோயுடன் நீண்டகாலம் போராடிய பிறகு தனது இறுதி மூச்சை விட்டதாக இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிட்ட ஒரு பதிவில் அது கூறியது.
எனினும், அவர் காலமான தேதி குறித்து அந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.
இரக்கம், பணிவு, மனித நன்மையின் மீதான நம்பிக்கை ஆகிய நற்பண்புகளுக்காக நினைவு கூரப்படும் நீதிபதி கேப்ரியோ, நீதிமன்றப் பணியின் போதும் வெளியிலும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையையுடன் ஒன்றிணைந்துள்ளார்.
மரியாதைக்குரிய நீதிபதியாக மட்டுமல்லாமல் அன்பான கணவர், தந்தை, தாத்தா, மூதாதையர் மற்றும் நண்பராகவும் நினைவுகூரப்படுவார்.
கேப்ரியோ புரிந்த பல்வேறு நல்ல செயல்கள் மூலம் அவரது மரபு நிலைத்து நிற்கும். அவரை கௌரவிக்கும் விதமாக அவர் ஒவ்வொரு நாளும் செய்தது போல உலகிற்கு இன்னும் கொஞ்சம் இரக்கத்தைச் சேர்க்க நாம் பாடுபடுவோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கேப்ரியோ தனது மருத்துவமனை படுக்கையிலிருந்து செவ்வாயன்று ஒரு காணொளியை பகிர்ந்து கொண்டார். நோய்க்கு எதிரான தனது போராட்டத்தில் ஏற்பட்ட "பின்னடைவை" ஒப்புக்கொண்ட அவர், தன்னைப் பின்தொடர்பவர்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி தெரிவித்தார்.
எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட "காட் இன் பிராவிடன்ஸ்" நிகழ்ச்சியின் மூலம் காப்ரியோ பொது மக்களால் அறியப்பட்டார். இந்த நிகழ்ச்சி 2018 முதல் 2020 வரை ஒளிபரப்பப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில்
அவர் சிறிய குற்றச்செயல்களை அன்பான தந்தையைப் போன்ற அணுகுமுறையுடன் கையாண்டார். பெரும்பாலும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் அவர் கருணை மனப்பான்மையைக் காட்டினார்.