கோலாலம்பூர், ஆக. 21 - தாய்லாந்தின் இசானில் உள்ள சாங் அரினா அரங்கில் நேற்று நடைபெற்ற ஆசியான் கிளப் வெற்றியாளர் கிண்ண ஏ பிரிவு போட்டியில் சிலாங்கூர் எஃப்.சி. அணி புரிராம் யுனைடெட் குழுவுடன் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டது.
காயங்களுக்காக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் புரிராம் யுனைடெட்டின் பீட்டர் சுல்ஜின் அடித்த கோல், மூன்று புள்ளிகளை முழுமையாகப் பெறும் சிலாங்கூர் எஃப்.சி.யின் கனவைத் தகர்த்தெறிந்தது.
அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய சிலாங்கூர் அணி 38வது நிமிடத்தில் இறக்குமதி வீரர் கிரிகோர் மோரேஸ் மூலம் வெற்றி கோலை அடித்தது.
இந்த கோலால் அதிர்ச்சியடைந்த புரிராம் யுனைடெட் சிலாங்கூர் தற்காப்புப் அரண் மீது பல தாக்குதல்களை நடத்தி தோல்விலிருந்து மீண்டு வர முயன்றது. ஆனால் கோல்களையும் போட அதனால் இயலவில்லை. இதன் வழி ரெட் ஜெயண்ட்ஸ் குழு முதல் பாதியில் 1-0 என கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் புரிராம் சமநிலையைத் தேடி தாக்குதல் பாணியிலான ஆட்டத்தைத் தொடர்ந்தது. ஆனால், சிலாங்கூரின் தற்காப்பு அரணால் அம்முயற்சி தடுக்கப்பட்டது.
சிலாங்கூர் கோல் காவலர் கலமுல்லா அல்-ஹஃபிஸ் அற்புதமாக ஆடி புரிராம் யுனைடெட்டின் ஆபத்தான முயற்சிகளை வெற்றிகரமாகத் தடுத்தார்.
சிலாங்கூர் எஃப்.சி.க்கு வெற்றி சாதகமாகத் தோன்றியபோது காய நேரத்தில் (90+6) கோல் அடித்து சமநிலையை ஏற்படுத்தியதன் மூலம் சுல்ஜ் உள்நாட்டு அணியின் ஹீரோவானார்.
ஆசியான் வெற்றியாளர் கிண்ணம் - சிலாங்கூர் 1-1 கோல் கணக்கில் புரிராமுடன் சமநிலை
21 ஆகஸ்ட் 2025, 3:35 AM