ad

எம். குமார் சிஐடி தலைவராக நியமிக்கப் பட்டதை பிரதமர் ஆதரிக்கிறார்

20 ஆகஸ்ட் 2025, 4:20 AM
எம். குமார் சிஐடி தலைவராக நியமிக்கப் பட்டதை பிரதமர் ஆதரிக்கிறார்

புத்ராஜெயா , ஆக 20;- புக்கிட் அமானின் குற்றவியல் புலனாய்வுத் துறையின் (சிஐடி) இயக்குநராக எம் குமார் நியமிக்கப்பட்டதை பிரதமர் அன்வர் இப்ராஹிம் இன்று ஆதரித்தார், அரசாங்கத்தில் முக்கியமான பதவிகளை வகிக்கும் திறமையான நபர்களின் வழியில் இனம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று கூறினார்.

"அது எனக்கு ஒரு பிரச்சினையே இல்லை. இந்த வேலையைச் செய்யக்கூடிய எவரும் அதற்கு தகுதியுடையவர்கள் "என்று நிதி அமைச்சகத்தின் மாதாந்திர கூட்டத்தில் அவர் கூறினார்.மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையை வழிநடத்த இடமாற்றம் செய்யப்பட்ட ஷுஹெய்லி ஜெயினுக்குப் பதிலாக குமார் ஆகஸ்ட் 8 அன்று கூட்டரசு  சிஐடி தலைவராக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார்.

ஆகஸ்ட் 12 அன்று, பெர்சாத்துவின் பத்ருல் ஹிஷாம் ஷாஹர் குமாரின் நியமனத்திற்கு "தாமதமான" வாழ்த்து இடுகையை வெளியிட்டார், "அவர் நாடு, மலேசியர் மலேசியாவை " நோக்கி செல்வதாக ,  (ஜ.செ.க வின் அமைப்பு சித்தாந்தத்தை தழுவத் தொடங்கியுள்ளது) என்பதை இது காட்டுகிறது" என்று  குற்றம் கூறினார்.போர்ட் டிக்சன் பெர்சத்து தலைவரும் ஜானி லிம் ஆயுதப்படைகளின் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றதையும் மேற்கோள் காட்டினார்.

இந்த மாதிரியான போக்கினை அரசாங்கம் தொடர்ந்தால் அது, (மலேசியா) விரைவில் அதன் முதல் பூமிபுத்ரா அல்லாத தலைமை நீதிபதி, ஆயுதப்படைகளின் தலைவர் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலைப் பெற முடியும் என்று பெர்சாத்துவின் பத்ருல் ஹிஷாம் அரசாங்கத்தை சாடினார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல், துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மற்றும் பல்வேறு துறைகளின் பிற இயக்குநர்கள் உட்பட நாட்டில் பெரும்பாலான உயர் பதவியில் உள்ள காவல் துறை தலைவர்கள் மலாய்க்காரர்கள் தான் என அன்வார் பதில் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.