சிங்கப்பூர், ஆகஸ்ட் 18 - வேப்பிங் பழக்கத்தை போதைப்பொருளுக்கு இணையான பிரச்சனையாகக் கருதி, அதனை கட்டுப்படுத்த கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்று சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
பெரும்பாலான வேப்பிங் சிகரெட்டுகளில் எட்டோமிடேட் போன்ற ஆபத்தான போதைப்பொருள்கள் இருப்பதால் இந்த நிலைமை எதிர்காலத்தில் மேலும் மோசமடையக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மின் சிகரெட்டுகளைப் புகைப்பவர்கள் அதனை நிறுத்துவதற்கு அரசாங்கம் வழி அமைக்கும் மற்றும் மறுவாழ்வு அளிக்கும் திட்டங்களை முன்னெடுக்கும் என்று அறியப்படுகின்றது.
மேலும், பள்ளிகள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் நாடு தழுவிய அளவில் அமலாக்கத்தை அரசாங்கம் தீவிரப்படுத்தும் மற்றும் பிரச்சாரத்தைத் தொடங்கும் என்றும் வோங் கூறினார்.
வேப்பிங் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு, அரசாங்கம் மேற்பார்வை மற்றும் மறுவாழ்வு அளித்து, அவர்கள் அந்தப் பழக்கத்தை விட்டு வெளியேற உதவும் என்று அவர் தெரிவித்தார்.