புத்ரஜெயா, ஆகஸ்ட் 18: பகடிவதை வழக்குகளில் எந்த சமரசமும் இல்லை மலேசிய கல்வி அமைச்சகம் என்று வலியுறுத்தியுள்ளது. விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதற்கு அதிகாரப்பூர்வ தளங்கள் மூலம் உடனடியாகப் புகாரளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அந்த நோக்கத்திற்காகவே பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட பகடிவதை புகார் அமைப்பு முறை மூலம் புகார்களைச் சமர்ப்பிக்கலாம். இதில் தங்கள் அடையாளங்களை வெளிப்படுத்த விரும்பாத புகார்தாரர்கள் பெயர் குறிப்பிடாமல் புகார்களை அனுப்பலாம்.
"விசாரணை மற்றும் நடவடிக்கை மேற்கொள்வதற்கு புகார்களில் தேதி, நேரம், இடம் மற்றும் குற்றவாளி மற்றும் பாதிக்கப்பட்டவரின் விவரங்கள் போன்ற முழுமையான தகவல்கள் இருக்க வேண்டும்.
"இந்த முக்கியமான தகவல் இல்லாமல், விசாரணைகள் மற்றும் நடவடிக்கை எடுப்பது கடினம்" என்று மலேசிய கல்வி அமைச்சகம் முகநூல் மூலம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், புகார்தாரர்கள் 03-8884 9325 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ அல்லது 014-800 9325 என்ற வாட்ஸ்அப் எண்ணிலோ புகாரளிக்கலாம்.
மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அனைத்து கல்வி பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் பகடிவதை கையாள்வதற்கான நடவடிக்கைகளை மேம்படுத்த எப்போதும் பாடுபடுவதாக மலேசிய கல்வி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.