புத்ராஜெயா, ஆகஸ்ட் 18 - கூட்டரசு பிரதேசத்தில் உள்ள பொதுமக்கள் மற்றும் வணிக வளாகங்கள், நாட்டின் கண்ணியம் மற்றும் அடையாளத்தின் சின்னமாக விளங்கும் ஜாலோர் கெமிலாங்கை எப்போதும் மதிக்க நினைவூட்டப்படுகின்றன.
தேசியக் கொடி, மக்களிடையே நாட்டின் மீதான அன்பை விதைக்கும் திறன் கொண்டது என்று கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் சலிஹா முஸ்தாபா தெரிவித்துள்ளார்.
ஆகவே, வணிக வளாகங்களும் பொது மக்களும் கொடியை ஏற்றும் போது நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கவனமாக செயல்படும்படி சலிஹா அறிவுறுத்தினார்.
"கடந்த சில வாரங்களாக நிகழ்ந்த சில சம்பவங்கள் மலேசியக் கொடியை ஏற்றும் போது கவனமாக இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகின்றன," என்றார் அவர்.
ஞாயிற்றுக்கிழமை புத்ரா ஜெயாவில் நடைபெற்ற கெஅடிலான் கட்சி ஏற்பாட்டிலான மடாணி நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
-- பெர்னாமா