ad

பள்ளியில் பகடிவதைக்கு ஆளான மாணவர்களின் பெற்றோர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்

14 ஆகஸ்ட் 2025, 7:20 AM
பள்ளியில் பகடிவதைக்கு ஆளான மாணவர்களின் பெற்றோர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்

ஷா ஆலம், ஆகஸ்ட் 14 — பள்ளியின் அலட்சியம் காரணமாக ஒரு மாணவர் காயமடைந்தாலோ அல்லது பகடிவதைக்கு ஆளானது நிரூபிக்கப்பட்டாலோ பெற்றோர்கள் பள்ளிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்று குற்றவியல் வழக்கறிஞர் இர்வான் சுமதி விளக்கினார்.

இந்த வழக்கு, பகடிவதை சம்பவம் பற்றியது மட்டுமல்ல, மாணவர் பள்ளி வளாகத்தில் இருக்கும்போது ஒரு பாதுகாவலராக தனது கடமையை பள்ளி நிறைவேற்றத் தவறுவது பற்றியது என்று அவர் கூறினார்.

"பகடிவதை சம்பவங்களின் அபாயத்தைக் குறைக்கும் சூழ்நிலையை உருவாக்குவதற்கும், விபத்துகளை தடுப்பதற்கும் பள்ளிகளும் ஆசிரியர்களும் பொறுப்பு" உண்டு என்று இர்வான் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.

கிழக்கு கடற்கரைப் பள்ளியில் நடந்த பகடிவதை வழக்கில் மாணவர் ஒருவர் வலது காதில் கேட்கும் திறனை இழந்தார். அதனால் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், மூத்த உதவியாளர், கல்வி இயக்குநர் ஜெனரல் மற்றும் அரசாங்கம் RM600,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்ட 2024 வழக்கையும் அவர் குறிப்பிட்டார்.

பள்ளிகளுக்கு எதிரான அலட்சியக் குற்றச்சாட்டுகள் குற்றவியல் வழக்காக இல்லாமல், சிவில் நடவடிக்கை மூலம் தொடரப்படும் என்றும் இர்வான் தெளிவுபடுத்தினார்.

காயத்தின் தீவிரம் (நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ) மற்றும் சம்பவத்திற்கு பங்களிக்கும் பிற காரணிகளின் அடிப்படையில் சேதத் தொகை மதிப்பிடப்படும் என்று இர்வான் மேலும் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.