ஷா ஆலம், ஆகஸ்ட் 13 : ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பிறந்த ஸ்கிம் மெஸ்ர ஊசிய எமாஸ் மற்றும் ஸ்கிம் மெஸ்ர இன்சான் இஸ்திமேவா உறுப்பினர்கள் RM150 ஷோப்பிங் வவுச்சர்களை செப்டம்பர் 30க்குள் பெறலாம்.
தகுதியுள்ள பொதுமக்கள் ஸ்கிம் மெஸ்ர 3ஆம் கட்டத்தின் கீழ் உரிமை கோருவதற்கு தங்கள் தொகுதியின் சமூக சேவை மையங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என யாவாஸ் அறக்கட்டளை தெரிவித்தது.
“இந்த உதவியை பெறுவதற்கான வாய்ப்பைத் தவறவிடாதீர்கள், குறிப்பிட்ட காலத்திற்குள் வவுச்சர்களை பெற்று கொள்ளுங்கள்,” என்று முகநூலில் அறிவிக்கப்பட்டது.
ஜூன் 1 முதல் இந்தத் திட்டத்தை செயல்படுத்த 2025 சிலாங்கூர் பட்ஜெட் RM20 மில்லியன் ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 20,000 தனிநபர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயனடைவார்கள்.