ஷா ஆலம், ஆகஸ்ட் 13 : எதிர்வரும் ஞாயிற்றுகிழமை அன்று 4 செகி ஃப்ரெஷ் பல்பொருள் அங்காடி கிளைகளில் சிலாங்கூர் விவசாய மேம்பாட்டு கழகத்துடன் (பிகேபிஎஸ்) இணைந்து ஏஹ்சான் ரஹ்மா விற்பனை நடைபெறும்.
“பிகேபிஎஸ் உடன் இணைந்து, தேவைப்படுபவர்களுக்குக் குறிப்பாக வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைத் தொடர்ந்து குறைந்த வருமானம் பெறும் பிரிவினருக்கு நன்மைகளை வழங்கும் நடவடிக்கைகளில் நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுகிறோம்.“செகி ஃப்ரெஷில் மலிவான மற்றும் தரமான அடிப்படைத் தேவைகளைப் பெறுங்கள்”.

மலிவு விற்பனையின் சமீபத்திய இருப்பிடத்தை பிகேபிஎஸ் முகநூலில் அல்லது விற்பனை போஸ்டர் அல்லது linktr.ee/myPKPS இல் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.