புத்ராஜெயா, ஆகஸ்ட் 13 - இருதரப்பு மூலோபாய உறவுகளை வலுப்படுத்த பல்வேறு முக்கிய துறைகளை உள்ளடக்கிய எட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகளில், நேற்று மலேசியாவும் வங்காளதேசமும் கையெழுத்திட்டன.
அதில் தற்காப்பு, எரிசக்தி, உயர்க் கல்வி, ஹலால் மேம்பாடு மற்றும் தனியார் பிரிவு ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளும் அடங்கும்.
நேற்று பெர்டானா புத்ராவில் நடைபெற்ற ஒப்பந்த பரிமாற்ற நிகழ்ச்சி, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமும், வங்காளதேச அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் பேராசிரியர் டாக்டர் முஹமட் யூனுசு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
மேலும், வெளியுறவு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹமட் ஹசான், தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹமட் காலெட் நோர்டின் மற்றும் இரண்டாவது நிதி அமைச்சரும் இடைக்கால பொருளாதார அமைச்சருமான டத்தோ ஸ்ரீ அமிர் ஹம்சா அசிசான் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளுடன் வங்காளதேசத்தைச் சேர்ந்த தொழில்துறையினர் இந்த ஒப்பந்த பரிமாற்றத்தில் ஈடுபட்டனர்.
--பெர்னாமா