வாஷிங்டன், ஆக. 12 - சீனா மீதான வரி விதிப்பை நிறுத்தி வைக்கும் முடிவை மேலும் 90 நாட்களுக்கு நீட்டிக்கும் நிர்வாக உத்தரவில் தாம் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் நேற்று அறிவித்தார்.
ஒப்பந்தத்தின் மற்ற அனைத்து அம்சங்களும் அப்படியே இருக்கும். இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி! என்று டிரம்ப் சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் கூறினார்.
இந்த உத்தரவின்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் தேதி வரை சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான கூடுதல் வரியை அமெரிக்கா நிறுத்தி வைக்கும்.
இருப்பினும், இந்தக் காலக்கட்டம் முழுவதும் 10 விழுக்காடு பரஸ்பர வரி தொடர்ந்து அமலில் இருக்கும்.
சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் வரி 90 நாட்களுக்கு ஒத்தி வைப்பு
12 ஆகஸ்ட் 2025, 5:59 AM