கோலா சிலாங்கூர், ஆகஸ்ட் 9 - இன்று புஞ்சாக் ஆலமில் உள்ள எம்பிகேஸ் (MPKS) மண்டபத்தில் MYFutureJobs உடன் இணைந்து நடத்தப்படுகிறது. கோவிட் நோய் தொற்று காலத்திற்குப் பின் சிலாங்கூர் மாநிலத்தில் அதிகரித்த வேலை இழந்தோருக்கு மறு வாய்ப்பு வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இது போன்ற வேலை வாய்ப்பு சந்தைகள் சிலாங்கூர் அரசால் இவ்வாண்டில் எல்லா மாவட்டங்களிலும் தொடர்ந்து ஆறாவது முறையாக நடத்தப்படுகிறது.
இந்நடவடிக்கை மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்கள், பட்டதாரிகள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கு தரமான வேலை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதில் அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்தி வருகிறது.
இன்று உற்பத்தி, தளவாடங்கள், நிர்வாகம், உணவு மற்றும் பானம் மற்றும் ஆதரவு சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 24 முதலாளிகளால் மொத்தம் 4,208 வேலை காலியிடங்கள் வழங்குகின்றன என சிலாங்கூர் ஊழியர் அதிகாரமளிப்பு பிரிவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பவித்ரா மீடியா சிலாங்கூருக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
இங்கு வழங்கப்படும் வேலை காலியிடங்களில் மொத்தம் 66.92%, RM2,500க்கும் அதிகமான சம்பள விகிதத்துடன் உள்ளன. இதில் RM 13000 வெள்ளி வரைக்கும் ஊதியங்களுக்கான வேலைகள் வழங்கப்படுவதால் அனைவரும் இதுபோன்ற வேலைவாய்ப்பு சந்தைகளுக்கு வருகை புரிந்து , தற்போதுள்ள ஊதியத்தை விட மேம்பட்ட வருமானம் ஈட்டும் வாய்ப்பு அவர்களுக்கு உள்ளதா என்பதை சோதிக்க வேண்டும்.
சிலாங்கூர் மக்களுக்கு மிகவும் திறமையான மற்றும் சிறந்த ஊதியம் பெறும் வேலை வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்ய இத்திட்டம் உதவும் என நம்பப்படுகிறது.