கோலாலம்பூர், ஆக. 8 - இங்குள்ள பந்தாய் டாலாமில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் மைடின் மார்ட் மற்றும் பாசார் ராயா கார்னிவல் உள்ளிட்ட நான்கு கடை வளாகங்கள் மற்றும் 14 குடியிருப்பு வீடுகள் மற்றும் நாசமாயின.
இந்த தீவிபத்து தொடர்பில் கோலாலம்பூர் செயல்பாட்டு மையத்திற்கு இரவு 11.11 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாக பந்தாய் டாலாம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் முகமட் ஷாரகர் அசிஸி வான் சைட் கூறினார்.
இந்த தீ விபத்தில் சுமார் 0.074 ஹெக்டர் பரப்பளவு கொண்ட குடியிருப்புப் பகுதி மற்றும் 0.223 ஹெக்டர் பரப்பளவு கொண்ட கடை வளாகங்களில் சுமார் 80 விழுக்காட்டுப் பகுதி அழித்ததாக அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.
பாசார் ராயா கார்னிவல் வர்த்தக மையத்தின் மேல் மாடி 100 அழிந்தது. மைடின் மார்ட்டின் கீழ்த் தளம் 20 விழுக்காடு பாதிக்கப்பட்டது. அதே நேரத்தில் அருகிலுள்ள உள்ள மற்ற மூன்று கடைகள் தலா 90 சதவீதம் அழிந்தன என்றார் அவர்.
இவ்விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அதிகாலை 1.49 மணியளவில் தீ வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டது என்றும் அவர் கூறினார்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு தீயணைப்புத் துறையின் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
தலைநகர், பந்தாய் டாலாமில் தீ! 14 வீடுகள், நான்கு கடைகள் சேதம்
8 ஆகஸ்ட் 2025, 4:51 AM