புத்ராஜெயா, ஆகஸ்ட் 7 - அரசு ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை 65ஆக உயர்த்தும் திட்டம் குறித்து பொது சேவைத் துறை (PSD) விரிவான ஆய்வை மேற்கொள்ளும் என்று அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் தெரிவித்தார்.
அப்பரிந்துரை இன்னும் தொடக்க கட்டத்தில் உள்ளதாகவும் எந்த முடிவையும் எடுப்பதற்கு முன்னர் ஆழமான ஆய்வு தேவை என்றும் அவர் தெரிவித்தார்.
புத்ராஜெயாவில் பொருளாதார நிபுணர் பேராசிரியர் Mariana Francesca Mazzucato-வின் "State Capacity and Directed Growth: A Mission Oriented," நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜூலை 31-ஆம் தேதி, மக்களவையில் 13-வது மலேசியத் திட்டத்தை தாக்கல் செய்யும்போது மலேசியா வயதான நாடு என்ற பாதையை நோக்கி செல்வதால் கட்டாயப் பணி ஓய்வு வயது வரம்பு மதிப்பாய்வு செய்யப்படும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருந்தார்.
தற்போது, மலேசியாவில் அரசு ஊழியர்களுக்கான கட்டாயப் பணி ஓய்வு வயது 60ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெர்னாமா