ad

இந்தியாவுக்கு கூடுதலாக 25 விழுக்காடு வரி- டிரம்ப் அதிரடி அறிவிப்பு

7 ஆகஸ்ட் 2025, 2:07 AM
இந்தியாவுக்கு கூடுதலாக 25 விழுக்காடு வரி- டிரம்ப் அதிரடி அறிவிப்பு
இந்தியாவுக்கு கூடுதலாக 25 விழுக்காடு வரி- டிரம்ப் அதிரடி அறிவிப்பு

வாஷிங்டன், ஆக. 7 - இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு கூடுதலாக 25 விழுக்காடு வரி விதிக்கும்  ஒரு நிர்வாக உத்தரவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று பிறப்பித்தார்.

அந்த நாடு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்வதால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 25 விழுக்காட்டு வரியுடன் கூடுதலாக இந்த வரி சேர்க்கப்படுவதாக அவர் கூறினார்.

இந்த நடவடிக்கை அமெரிக்க-இந்திய உறவுகளை மேலும் சிக்கலாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாத இறுதியில் முதல் முறையாக சீனாவுக்குச் செல்வார் என்று இந்திய அரசாங்க வட்டாரம் கூறிய சிறிது நேரத்திலேயே இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இந்தியாவுடனான பேச்சுவார்த்தைகள் வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்கத் தவறியதைத் தொடர்ந்து அமெரிக்க-இந்தியா உறவுகள் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளன.

உக்ரேனில் அமைதியை ஏற்படுத்த ரஷ்யாவை வலியுறுத்துவதை நோக்கமாகக் கொண்ட டிரம்பின் உயர்மட்ட அரசதந்திர தூதர் ஸ்டீவ் விட்காஃப் மாஸ்கோவில் நடத்திய சந்திப்புகளைத் தொடர்ந்து திங்களன்று டிரம்ப் முதன்முதலில் வெளியிட்ட சமிக்ஞையின் அடையாளமாக வெள்ளை மாளிகையின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்காவிட்டால் ரஷ்யா மீது அதிக வரிகளையும் அதன் நட்பு நாடுகள் மீது இரண்டாம் நிலை தடைகளையும் விதிக்க நேரிடும் என்று டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.