ad

3 ஆண்டுகளில் தொலைபேசி மோசடிகளால் மலேசியர்கள் அரை பில்லியன் ரிங்கிட் இழப்பு

6 ஆகஸ்ட் 2025, 10:15 AM
3 ஆண்டுகளில் தொலைபேசி மோசடிகளால் மலேசியர்கள் அரை பில்லியன் ரிங்கிட் இழப்பு

கோலாலாம்பூர், ஆகஸ்ட் 6 - கடந்த 3 ஆண்டுகளில் தொலைபேசி மோசடிகளால் மலேசியர்கள் அரை பில்லியன் ரிங்கிட்டை இழந்துள்ளனர். அதாவது 2023 முதல் இவ்வாண்டு ஜூன் வரை 7,473 தொலைபேசி மோசடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இதன் மூலம் RM532,765,591.07 இழப்புகள் ஏற்பட்டதாகப் புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ருஸ்டி முஹமட் இசா கூறினார்.

"2023ஆம் ஆண்டில் மட்டும், RM158.8 மில்லியன் இழப்புகளை உள்ளடக்கிய 3,027 புகார்களைப் பெற்றோம். இதையடுத்து மோசடி கும்பல்களைச் சேர்ந்த 1,139 நபர்களை கைதுச் செய்தோம்" என்றார் அவர்.

கடந்தாண்டு மோசடி சம்பவங்களின் எண்ணிக்கை 2,825ஆக சற்றுக் குறைந்தாலும், இழப்புகள் RM142.2 மில்லியனாக அதிகமாக இருந்தது. அது தொடர்பாக 1,281 பேர் கைதானதாக முஹமட் இசா கூறினார்.

இவ்வாண்டில் ஜனவரி முதல் ஜூன் வரை காவல்துறை 1,621 மோசடி சம்பவங்களைப் பதிவுச் செய்துள்ளது. இதன் மூலம் RM72.95 மில்லியன் இழப்பு ஏற்பட்டு, 713 பேர் கைதாகினர்.

இந்த புள்ளிவிவரங்கள் அடிப்படையில் தொலைபேசி மோசடிகள் எவ்வளவு மோசமாகவும் மாறிவிட்டன என்பதைக் காட்டுகின்றன என அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.