சுங்கை பூலோ, ஆகஸ்ட் 6 - சுங்கை பூலோ வனப்பகுதியில் 47 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இடத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்ததாகக் கண்டறியப்பட்ட குடியிருப்பாளர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு 248 இறுதி அறிவிப்புகள் வழங்கப்பட்ட பின்னர், அவ்விடங்கள் இப்போது காலி செய்யும் தருணத்திற்காகக் காத்திருக்கின்றன.
சிலாங்கூர் மாநில வனத்துறை (JPNS) தலைமையிலான ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், பல்வேறு மாநில நிறுவனங்களுடன் இணைந்து மேல் நடவடிக்கை எடுப்பதற்கு முன் இறுதி எச்சரிக்கையான அறிவிப்புகளை சிலாங்கூர் மாநில வனத்துறை வழங்கியது.
சிலாங்கூர் மாநில வனத்துறைக்கு சொந்தமான நிலத்தை காலி செய்ய அவர்களுக்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டது. அதில் செப்டம்பர் 2ஆம் தேதி இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டது.