சுபாங், ஆகஸ்ட் 5 - இன்று தொடங்கி ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை ரஷ்யாவுக்கு தேசியப் பயணம் மேற்கொண்ட மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், நேற்று காலை அந்நாட்டிற்கு புறப்பட்டார்.
நேற்று மாமன்னரை ஏற்றிச் சென்ற சிறப்பு விமானம், காலை மணி 8.55க்கு சுபாங் அரச மலேசிய ஆகாயப்படை தளத்திலிருந்து புறப்பட்டது.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் மற்றும் துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபடில்லா யூசோப்பும் மாமன்னரை வழி அனுப்பி வைத்தனர்.
அவர்களுடன் வெளியுறவு அமைச்சர் டத்தோ முஹமட் ஹசான், தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில், சுகாதார அமைச்சர் டத்தோ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சூல் அஸ்ரி அபு பகார் ஆகியோரும் உடன் இருந்தனர்.
மாமன்னர் புறப்படுவதற்கு முன்னதாக அரச மரியாதை நிமித்தம் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்கப்பட்டதுடன் அரச மலாய் இராணுவத்தின் முதலாவது படைப்பிரிவு தேசிப் பண் பாடி அரச வணக்கத்தையும் செலுத்தினர்.
சுல்தான் இப்ராஹிம் இன்று மாஸ்கோவைச் சென்றடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெர்னாமா