ஷா ஆலம், ஆக. 5 - ஷா ஆலம் மாநகரின் புதிய துணை டத்தோ பண்டாராக சஃப்ரியா முகமது அட்ஹார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் தனது பணிகளை ஆகஸ்டு 1 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கினார்.
அவரது பதவியேற்பு நிகழ்வு நேற்று இங்குள்ள விஸ்மா எம்.பி.எஸ்.ஏ.வில் ஷா ஆலம் டத்தோ பண்டார் டத்தோ முகமட் பவுஸி முகமது யாத்திம் முன்னிலையில் நடைபெற்றது.
சஃப்ரியாவின் நியமனம் ஷா ஆலம் மாநகர் மன்ற தலைமைத்துவத்திற்கு ஒரு புதிய உத்வேகமாக அமைந்துள்ளது என்று மாநகர் மன்றம் ஓர் அறிக்கையில் கூறியது.
பொது சேவைத் துறையில் விரிவான அனுபவத்தையும் மேம்பாட்டுக் கொள்கை, மேலாண்மை மற்றும் புதுமைகளில் நிபுணத்துவத்தையும் அவர் பெற்றுள்ளார்.
கடந்த 2019 ஆகஸ்டு முதல் 2025 ஜூலை வரை மலேசிய சுகாதார அமைச்சின் தேசிய சுகாதார நிறுவனத்தில் பதிவாளராக அவர் பணியாற்றினார்.
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பல முக்கிய அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களில் சஃப்ரியா பணியாற்றியுள்ளார்.
தேசிய பொது நிர்வாக நிறுவனமான இந்தான்,
சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு, மகளிர் குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு ஆகியவை அவர் பதவி வகித்த முக்கியமான அமைச்சுகளில் அடங்கும்.
ஷா ஆலம் துணை டத்தோ பண்டாராக சஃப்ரியா முகமது அட்ஹார் நியமனம்
5 ஆகஸ்ட் 2025, 5:51 AM