காஷ்மீர், ஆகஸ்ட் 5 - இந்தியப் பொருட்களுக்கு 25 விழுக்காடு கூடுதல் இறக்குமதி வரியை அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்பின் நிர்வாகம் விதித்தது. இதற்கு காஷ்மீரில் உள்ள கைவினைப் பொருட்கள் செய்யும் கலைஞர்களும் விவசாயிகளும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
தற்போது, சில நிறுவனங்கள் 80 விழுக்காட்டுப் பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் நிலையில் கூடுதல் வரி விதிப்பு வியாபாரிகளை பெருமளவில் பாதிக்கும் என்று ஏற்றுமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், விவசாயம், தோட்டக்கலை மற்றும் கைவினைப்பொருட்கள் ஆகியவை அந்நாட்டின் வளமான பொருளாதாரத்திற்கு துணைப்புரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த திடீர் வரிகட்டண உயர்வு, ஏற்றுமதிக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தி செலவுகளை அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல், ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரங்களை மோசமான பின்னடைவிற்கு தள்ளும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
பெர்னாமா