செராஸ், ஆக. 2-
பக்கவாத நோய்க்குப் பின்னர் ஏற்பட்ட மூட்டு வலியால் நடப்பதற்குப் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகிறார் ருக்குமணி த/பெ எத்திராஜூ எனும் மாது. ருக்குமணியின் நிலையைக் கேள்வியுற்ற பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வேய்ன் ஓங் சுன் வேய் அவருக்கு உதவியாக சக்கர நாற்காலியை அன்பளிப்பாக வழங்கினார்.
இதன் வழி இவரின் சிரமத்தை வேய்ன் ஓங் ஓரளவு குறைத்திருப்பதாகத் தெரிகிறது.
நடப்பதற்குப் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வந்த எனக்கு சட்டமன்ற உறுப்பினர் வேய்ன் ஓங் தக்க நேரத்தில் சக்கர நாற்காலியை வழங்கியுள்ளார்
இதற்காக அவருக்கு இவ்வேளையில் நானும் எனது கணவரும் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர் கூறினார்.
இதற்கு முன்பு தனது கண் அறுவை சிகிச்சைக்கு வேய்ன் ஓங் 1,000 வெள்ளி வழங்கியிருப்பதையும் அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.
உடல் நலம் குன்றிய ருக்குமணிக்கு சக்கர நாற்காலி- பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்
2 ஆகஸ்ட் 2025, 12:41 PM