(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஆக. 2- அண்மையில் ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட தொழிற்சாலையின் 74 ஊழியர்களுக்கு ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் அத்தியாவசியப் பொருள்களை வழங்கி உதவினார்.
நேற்று இங்கு நடைபெற்ற நிகழ்வொன்றில் அப்பொருள்களை
பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைத்த அவர், அவர்களின் சுமையைக் குறைப்பதில் இந்த உதவி ஓரளவு துணை புனியும் எனத் தாம் நம்புவதாக குறிப்பிட்டார்.
அந்த தீவிபத்து தொழிற்சாலைக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. மாறாக, அதில் வேலை செய்து வந்த 74 ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தையும் பாதித்துள்ளது. பாதிக்கப்ளட்டவர்களுக்கு உதவ உடனடி நடவடிக்கை எடுத்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி. நாங்கள் தொடர்ந்து அடுத்தக்கடட மேம்பாடுகளை கவனித்து வருவோம் என அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்தார்.
கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் ரவாங், பண்டார் கன்றி ஹோம்ஸில் அமைந்துள்ள கேர்ஃபீல் காட்டன் இண்டஸ்ட்ரிஸ் (ம) சென். பெர்ஹாட் நிறுவனம் பெரும் சேதத்திற்குள்ளானது.
இதனால் அதில் வேலை செய்து வந்த சுமார் 80 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களில்
சுமார் 60 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொழிற்சாலை ஊழியர்கள் எதிர்நோக்கி வரும்
பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றுக்கு உரிய தீர்வு காணும் நோக்கில் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் சார்பாக அவரின் பிரதிநிதி டிக்கம் லுர்ட்ஸ் ரவாங் மனித வள
அலுவலகத்தின் அதிகாரிகள் மற்றும் ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட்டின் சிறப்பு அதிகாரி தினேஷ் செல்வராஜூ ஆகியோர் அண்மையில் இங்கு வருகை புரிந்தனர்.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு நிறுவனத்தின் (சொக்சோ) எஸ்.ஐ.பி. எனப்படும் தொழிலாளர் காப்புறுதி முறை வாயிலாக உதவிகளை வழங்குவதற்கும் அருகிலுள்ள தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்புகளை
ஏற்படுத்தி தருவதற்கும் முயற்சிகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.