கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 : இன்று அதிகாலை இந்தோனேசியாவின் தெற்கு மலுக்கு கடலில் 5.4 ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
காலை 6.12 மணிக்கு 0.2 டிகிரி தெற்கிலும், 126.1 டிகிரி கிழக்கிலும் 114 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
“இந்தோனேசியாவின் மேற்கு பப்புவாவிலிருந்து வடமேற்கே 177 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று ஆரம்ப மதிப்பீட்டில் கண்டறியப்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ மெட்மலேசியா வலைத்தளம் மற்றும் நிறுவனத்தின் சமூக ஊடக தளங்கள் மூலம் கூடுதல் தகவல்களைப் பெறலாம்.
-- பெர்னாமா