பெட்டாலிங் ஜெயா ஆக 01: அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் புவாட் ஜர்காஷி இன்று ம.இ.க துணைத் தலைவர் எம். சர்வணன் சாடலுக்கு எதிர்வினை ஆற்றியுள்ளார்., ஒற்றுமை அரசாங்கத்தில் அமைச்சரவைப் பதவியை பெறுவது குறித்து "முற்றிலும் ஏமாற்றப்பட்டதாக" உணர்ந்தால் ம.இ.க ஏன் முன்பே வெளியேறவில்லை என்று புவாட் ஜர்காஷி கேட்டார்.
ஒரு பேஸ்புக் பதிவில், ம.இ.க எல்லாவற்றையும் இழக்க நேரிடும் என்று அஞ்சுவதாகவும், கோரிக்கைகள் அல்லது அச்சுறுத்தல்களைச் செய்ய அதற்கான அரசியல் வலிமை ம.இ.காவுக்கு இல்லை என்றும் புவாட் சாடியிருந்தார்.
"நீங்கள் ஏமாற்றப்படுவதை அறிந்திருந்தால், நீங்கள் ஏன் உடனே விலகிச் செல்லவில்லை? உங்கள் தோளை மற்றவர்கள் சவாரிக்கு ஏன் தொடர்ந்து வழங்க வேண்டும்? "என் அவர் கேட்டார்.
அவர் ‘’சரவணன் உண்மையில் ஏமாற்றுகிறார் என்பதை இது காட்டுகிறது. அதிகம் குரைப்பது, கடிக்காது "என்று அவர் சரவணனின் உத்துசன் மலேசியா பேட்டிக்கு எதிர்வினையாற்றினார் புவாட் ஜர்காஷி .
"ஏன் ம இ க தயங்குகிறது? இருப்பதோ ஒரே ஒரு எம். பி. மட்டுமே. அதன் மிரட்டலோ அல்லது அதன் ஆதரவினை வாபஸ் வாங்கிக் கொண்டாலோ ஆகப்போவது எதுவுமில்லை. அதற்கான வலிமையும் அதற்கு கிடையாது. இருப்பதும் இல்லாமல் போய்விடும் என்று அவர் பயப்படுகிறார் ".
சரவணன் ம இ காவின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் , அவர் தற்போதைய நிர்வாகம் ம.இ.க வை "தேவையற்றதாக" கருதுவதாக உணர்கிறார், மஇ.கா வில் பல மூத்த தலைவர்கள் இருந்தபோதிலும் அவர்களுக்கு அரசு அல்லது ஜி.எல்.சி பதவிகள் எதுவும் வழங்கப் படவில்லை என்றும் அவர் உத்துசான் மலேசியாவிடம் கூறினார்.
அக்டோபரில் நடைபெறும் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கட்சி தனது அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு செய்யும் என்று தப்பா எம். பி. கூறினார்.
ஆனால் கட்சி பின்வாங்க முடியாத அச்சுறுத்தல்களைச் செய்வதற்குப் பதிலாக பாரிசன் நேஷனல் (பி. என்) உடனிருப்பது சிறப்பாக இருக்கும் என்று புவாட் கூறினார்.
"பேரம் பேச சக்தியற்றவர்கள், சாதிக்க போவதாக ஏமாற்ற முயற்சிப்பது பலனளிக்காது. தப்பாவில் மட்டுமே அதனிடம் உள்ள ஒரு நாடாளுமன்றம் பேரத்திற்கு போதுமானதாகது . ம.இ.க பாரிசானில் இருப்பது நல்லது, வெற்று அச்சுறுத்தல்களை விடுவதை காட்டிலும் ம.இ.க இன்னும் அதிக பொறுப்புடன் செயல்பட வேண்டும்" என்று அவர் கூறினார்.
புவாட்டின் கருத்துக்கு பதிலளித்த சரவணன், புவாட் காலம் கடந்து பதிலளித்துள்ளார் அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹிட் ஹமிடி ஏற்கனவே இந்த பிரச்சினைக்கு பதிலளித்த உள்ளதாகவும் கூறினார்.
"புவாட் சர்காசியின் கருத்து தேவையற்றது, அவரின் கருத்துகளைப் பற்றி எவரும் கவலைப்பட வில்லை எனவும் பதிலுரைத்தார். உங்கள் சைபர் துருப்புக்கள் மட்டுமே உங்களுக்கு ஆதரவளிக்கின்றன "என்று அவர் கூறினார்.
"உங்கள் சொந்தக் கட்சி கூட மலாய்க்காரர்களால் நிராகரிக்கப் பட்டுள்ளது என்பதை நீங்கள் உணரவில்லையா? பெரிக்காத்தான் நேஷனல் மலாய் பெரும்பான்மை இடங்கள் அனைத்தையும் வென்றது ".ம.இ.க மற்றும் ம.சீ.ச பாரிசானை விட்டு வெளியேறினால் கடும் விளைவுகள் ஏற்படும் என்றும் சரவணன் புவாட்டை எச்சரித்தார். "இப்போதுள்ள 26 இடங்களில் எத்தனை இடங்களை உங்கள் கட்சியால் வெல்ல முடியும் என்று புவாட்டிடம் கேள்வி எழுப்பினார் சரவணன்