கோலாலம்பூர், ஆகஸ்ட் 1 - எதிர்வரும் 2026-2035ஆம் ஆண்டுக்குள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் பத்து லட்சம் மலிவு விலை வீடுகளைக் கட்டுவதற்கு அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது.
இத்திட்டம் மத்திய, மாநில அரசாங்கங்கள் மற்றும் தனியார் மேம்பாட்டாளர்களால் செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தின் மூலம் அதிகமான மக்கள் வசதியான மற்றும் பாதுகாப்பான வீடுகளை கொண்டிருக்க முடியும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கைத் தெரிவித்தார்.
மக்களுக்கு மலிவு விலையில் வீடுகள் வழங்கும் இலக்கை அடையும் முதல் பிரதமராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இருப்பார் என்று கடந்த ஏப்ரல் 29 அன்று, வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சி அமைச்சர் ஙா கோர் மிங் கூறினார்.
-- பெர்னாமா