ஜாலான் பார்லிமன், ஜூலை 31 - கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதியில் இருந்து இன்று வரையில் பள்ளி இடைநிற்றல் பிரச்சனையில் சம்பந்தப்பட்ட 4,758 மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு திரும்பியுள்ளனர் என கல்வி அமைச்சின் மாணவர் கண்காணிப்பு
செயல்முறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-ஆம் ஆண்டில் வெற்றிகரமாக பள்ளிக்குத் திரும்பிய இடைநிற்றல் பிரச்சனையில் சம்பந்தப்பட்ட 2,708 மாணவர்களுடன் ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கை அதிகரிப்பைக் காட்டுவதாக கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.
தரவு அடிப்படையிலான அணுகுமுறை மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு ஆகியவை தேசிய கல்வி செயல்முறையில் மாணவர்கள் மீண்டும் திரும்பும் விகிதத்தை அதிகரிக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டிருப்பதாக வோங் கா வோ கூறினார்.
இன்று, மக்களவையில் பள்ளி இடைநிற்றல் விவகாரத்தில் SiPKPM-மின் செயல்திறன் முடிவு விகிதம் குறித்து பண்டார் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் ரொஸ்லான் ஹஷிம் எழுப்பிய கேள்விக்கு, வோங் இவ்வாறு பதிலளித்தார்.
-- பெர்னாமா